பிரதமரின் நலிந்தோர் நல்வாழ்வு மாநாட்டு உரை நேரடி ஒளிபரப்பு


பிரதமரின் நலிந்தோர் நல்வாழ்வு மாநாட்டு உரை நேரடி ஒளிபரப்பு
x

சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் பிரதமரின் நலிந்தோர் நல்வாழ்வு மாநாட்டு உரை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அரியலூர்

தா.பழூர்

இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் நலிந்தோர் நல்வாழ்வு மாநாட்டில் நாட்டு மக்களுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கு காணொலி காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பிரதமரின் உரை அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 617 விவசாயிகளுக்கு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் கிரீடு வேளாண் அறிவியல் மைய பெருந்தலைவர் நடனசபாபதி வரவேற்றுப்பேசினார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு அளித்துவரும் வேளாண்மை சார்ந்த திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் ராஜா ஜோஸ்லின் காணொலி காட்சி மூலம் பிரதமர் ஆற்றிய உரையை தமிழில் மொழி பெயர்த்துக்கூறினார். வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளின் விவசாயம் சார்ந்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். முடிவில் தொழில்நுட்ப வல்லுனர் ராஜ்கலா நன்றி தெரிவித்து பேசினார்.


Next Story