தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுக்கடைகள் 3 நாள் மூடல்
தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுக்கடைகள் 3 நாள் மூடப்படுகிறது.
ராமநாதபுரம்
கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் வருகிற 30-ந் தேதி முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இதையொட்டி பொதுஅமைதி, சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் 28, 29, 30-ந் தேதி ஆகிய 3 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுகடைகள், பார்கள், தனியார் பார்கள் முழுமையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story