மது விற்றவர் கைது
மணல்மேட்டில், காந்தி ஜெயந்தி நாளில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
மணல்மேடு:
காந்தி ஜெயந்தி அன்று மதுபானக்கடைகளுக்்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதாக கலெக்டர் மகாபாரதி அறிவித்து இருந்தார். அதன்படி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா உத்தரவிட்டார். இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் மேற்பார்வையில் மணல்மேடு பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மணல்மேடு மேலத்தெருவை சேர்ந்த சின்னராஜா(வயது 37) என்பவர் அந்த பகுதியில் உள்ள பருத்தி கொல்லையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வந்த மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் விற்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னராஜாவை கைது செய்து அவரிடம் இருந்து 167 மதுபாட்டில்கள், 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மொபட் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.