குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை அருகே உள்ள மேமாத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் கடுகு என்கிற செல்வகுமார் (வயது32). இவர் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இவரை சமீபத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கில் போலீசார் கைது செய்து பொறையாறு கிளை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் செல்வகுமார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பரிந்துரை செய்தார். அதன்பேரில் செல்வகுமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை பெற்ற செம்பனார்கோவில் போலீசார் பொறையாறு கிளைச் சிறை அதிகாரிகளிடம் வழங்கி, அங்கிருந்த செல்வகுமாரை திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர்.