எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

பாளையங்கோட்டையில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை கோட்ட எல்.ஐ.சி. எஸ்.சி., எஸ்.டி. பவுத்த ஊழியர்கள், அதிகாரிகள் நலச்சங்கத்தினர் சார்பில், பாளையங்கோட்டை கோட்ட எல்.ஐ.சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். தென்மண்டல சங்க பொறுப்பாளர்கள் குமரேசன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் எல்.ஐ.சி. ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர். பொதுச்செயலாளர் சுவாமிநாதன், கோட்ட செயலாளர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story