காக்களூரில் பல மாதங்களாக பூட்டி கிடக்கும் நூலகம் - பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை


காக்களூரில் பல மாதங்களாக பூட்டி கிடக்கும் நூலகம் - பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை
x

காக்களூரில் பல மாதங்களாக பூட்டி கிடக்கும் நூலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் காக்களூர் ஊராட்சியில் ஊராட்சி துறை, அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம் மூலம் கடந்த 2021 - 22 -ம் ஆண்டு ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் செலவில் நூலக கட்டிடம் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நூலகம் செயல்பட ஆரம்பித்தது.

ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த நூலக கட்டிடம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.

இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை படிப்பதற்கோ அன்றாட செய்தித்தாள்களை படிப்பதற்கோ முடியவில்லை.

மேலும் பல லட்சம் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கட்டிடத்துக்குள் பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கிறது. மேலும் நூலக கட்டிடத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படாததால் திறந்தவெளியாக காணப்படுகிறது.

மேலும் இரவு நேரத்தில் ஆடு, மாடு, நாய் போன்றவை கட்டிடத்தின் அருகே படுத்து தூங்குவதும் சுகாதார சீர்கெட்டை உண்டாக்குவதுமாக உள்ளது. எனவே பல மாதங்களாக திறக்கப்படாமல் பூட்டி கிடக்கும் இந்த நூலக கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story