அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க நூலகங்கள் தேவை - அமைச்சர் பெரியகருப்பன்


அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க நூலகங்கள் தேவை - அமைச்சர் பெரியகருப்பன்
x

அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க நூலகங்கள் தேவை என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் உள்ள 3 ஊராட்சிகளில் நடந்துவரும் ஊரக வளர்சி பணிகள், மகளிர் சுயஉதவிகுழுவினரை சந்திப்பு மற்றும் சீரமைக்கப்பட்ட நூலக திறப்பு விழா என பல்வேறு வளர்ச்சி பணி பார்வையிட வந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைஞாயிறு ஒன்றியம் நாலுவேதபதி ஊராட்சி மன்றம் அருகே ரூ 1.19 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட நூலகத்தை திறந்துவைத்தார்.

மேலும் ஊராட்சி மன்ற வளாகத்தில் கூடியிருந்த மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களை சந்தித்து அரசின் உதவிகள் குறித்து கேட்ட பின்னர் மரக்கன்றுகளை நட்டுவைத்து அமைச்சர் பேசியதாவது,

மகளிர் சுயஉதவிகுழுவினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். அருகில் உள்ள நூலகம் ரூ 1.19 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது போல் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளில் உள்ள நூலகங்களை பாதுகாக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

ஒரு அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவது நூலகமும், அதில் உள்ள பயன் தரும் நூல்களும் ஆகும்.அப்படிபட்ட நூலகங்களை பாதுகாப்பதில் அரசு மட்டும்போதாது. பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை. நூலகத்துக்கு தேவையான புத்தங்களை பொதுமக்கள், பிரமுகர்கள், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரும் வழங்கி பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story