திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம்


திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 19 Oct 2023 12:15 AM IST (Updated: 19 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் நகராட்சி தோப்பூர் நந்தனார் திடலில் தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மகளிர் விடுதலை இயக்கம் மாவட்ட துணை செயலாளர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தென்காசி மண்டல செயலாளர் முரசு தமிழப்பன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், வருகிற டிச. 23-ந் தேதி திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல்.திருமாவளவன் தலைமையில் நடக்கும் வெல்லும் சனநாயகம் மாநாட்டுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 25 பஸ்களில் சென்று கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி துணை செயலாளர் மணிகண்டராஜா, ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய பொருளாளர் கனிதுரை, உடன்குடி ஒன்றிய பொருளாளர் டேவிட் ஜான்வளவன், காயல்பட்டினம் நகர செயலாளர் அல்அமீன், தென்திருப்பேரை நகர செயலாளர் அய்யப்பன், திருச்செந்தூர் நகர பொருளாளர் தோப்பூர் சரண்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story