'மாநில சுயாட்சி கொள்கையுடன் செயல்படுவோம்' - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் அரசின் பரிந்துரைகளை கவர்னர் ஏற்பது இல்லை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;-
"மாநில சுயாட்சி கொள்கையுடன் தொடர்ந்து செயல்படுவோம், அதில் சந்தேகமே வேண்டாம். முன்பு துணைவேந்தரை நியமிக்கும்போது அரசுடன் கலந்தாலோசித்து கவர்னர் முடிவெடுப்பார். ஆனால் தற்போது பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் அரசின் பரிந்துரைகளை கவர்னர் ஏற்பது இல்லை.
அரசு ஆலோசனையை ஏற்காமல் கவர்னர் முடுவெடுப்பதால் துணைவேந்தர் மசோதா கொண்டு வரப்பட்டது. மீதமுள்ள மசோதாக்களுக்கும் கவர்னர் விரைந்து ஒப்புதல் தர நடவடிக்கை எடுக்கப்படும்."
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Related Tags :
Next Story