அரசு பள்ளியில் தொடர்ந்து கற்போம் திட்டம் தொடக்கம்


அரசு பள்ளியில் தொடர்ந்து கற்போம் திட்டம் தொடக்கம்
x
தினத்தந்தி 11 Jun 2023 12:15 AM IST (Updated: 11 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினம் அரசு பள்ளியில் தொடர்ந்து கற்போம் திட்டம் தொடங்கப்பட்டது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2022-23 கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு தேர்வில் 121 மாணவிகள் பொதுத்தேர்வு எழுதிய நிலையில் 117 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். வெற்றி வாய்ப்பை இழந்த 4 மாணவிகளை பள்ளிக்கு வரவழைத்து ஆசிரியர்கள் பாடங்களை கற்பித்து தேர்விற்கு வழிகாட்டினர்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையில் புதிய திட்டமான தொடர்ந்து கற்போம் எனும் இந்த முன்னோடி திட்டத்தை காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் சுல்தான் லெப்பை தொடங்கி வைத்தார். முன்னோடி திட்டத்தின் நோக்கத்தை ஆசிரிய பயிற்றுநர் நபில்புஹாரி விளக்கம் அளித்தார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை ராஜலட்சுமி, எழில்சாந்தி, மரிய ஜாக்குலின் மற்றும் ரதினா ஆகியோர் வெற்றி வாய்ப்பை இழந்த பத்தாம் வகுப்பு உடனடி துணைத் தேர்வு எழுதும் மாணவிகளுக்கு கற்றலுக்கு வழிகாட்ட தொடங்கினர். ஒரு மாத காலம் தினமும் வருகை தர மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.


Next Story