தமிழ்மொழியை பயன்பாட்டு மொழியாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம் - டி.டி.வி.தினகரன்


தமிழ்மொழியை பயன்பாட்டு மொழியாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம் - டி.டி.வி.தினகரன்
x

நம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் தமிழ்மொழியை பயன்பாட்டு மொழியாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

மொழிகள் பல இருப்பினும் தாய்மொழி எனும் உளியால் மட்டுமே சிந்தனை எனும் சிற்பத்தை செதுக்கி ஒருவரின் அறிவாற்றலை பெருக்க முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தும் உலக தாய்மொழிகள் தினம் இன்று.

தாய்மொழியாம் தமிழ் மொழியை காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளை நினைவில் கொள்வதோடு, நம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் தமிழ்மொழியை பயன்பாட்டு மொழியாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story