வனப்பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தை


வனப்பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தை
x

மாஞ்சோலை அருகே வனப்பகுதியில் சிறுத்தை இறந்து கிடந்தது.

திருநெல்வேலி

அம்பை:

மாஞ்சோலை அருகே வனப்பகுதியில் சிறுத்தை இறந்து கிடந்தது.

வனவிலங்குகள்

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. இவை அவ்வப்போது மலையடிவார பகுதிக்கு வந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தன.

கடந்த 4-ந் தேதி அம்பை சரகத்திற்கு உட்பட்ட மாஞ்சோலை அருகே உள்ள நாலுமுக்கு தோட்டப்பகுதிக்கு வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை தாக்கி ஜெஸ்ஸி என்ற பெண் படுகாயம் அடைந்த சம்பவமும் நடந்தது.

இறந்து கிடந்த சிறுத்தை

இந்த நிலையில் மாஞ்சோைல நாலுமுக்கு தேயிலை தோட்ட பகுதியில் நேற்று காலையில் பொதுமக்கள் சென்றனர். அப்போது, வனப்பகுதியில் ஒரு சிறுத்தை இறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் கால்நடை டாக்டர்களும் வரவழைக்கப்பட்டனர். பின்னர் சிறுத்தையின் உடலை வனத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

பிரேத பரிசோதனை

பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே சிறுத்தை எப்படி இறந்தது என்பது தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story