கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர் கள ஆய்வு


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர் கள ஆய்வு
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர் கள ஆய்வு நடத்தினர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்குக்குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில், உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், சிந்தனைச்செல்வன், வேல்முருகன், பிரகாஷ், ராஜா ஆகியோர் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் முன்னிலையில் கள ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி அவர்கள் வி.கூட்டுரோட்டில் அமைந்துள்ள கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி கழகத்தில் உள்ள ஆட்டுப்பண்ணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து சின்னசேலத்தில் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வது, கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தினர். பின்னர் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் கட்டுவது மற்றும் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலை சீரமைப்பது தொடர்பாகவும் ஆய்வு நடத்தினர். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.3 கோடியே 83 லட்சத்து 14 ஆயிரத்து 765 மதிப்பில் 29 பேருக்குபல்வேறு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற பேரவை பொது கணக்குக்குழு தலைவர் செல்வபெருந்தகை வழங்கினார்.

கலந்தாய்வு கூட்டம்

தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், சட்டமன்ற பேரவை ஆய்வுக்குழு செயலாளர் சீனிவாசன், வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரி பெருமாள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், சின்னசேலம் பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ், ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி, துணைத் தலைவர் அன்புமணிமாறன், கோட்டாட்சியர் பவித்ரா, தாசில்தார் இந்திரா, துணைத் தலைவர் ராகேஷ், பேரூராட்சிகள் துறை உதவி இயக்குனர் வெங்கடேசன், செயல் அலுவலர் உஷா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணிவண்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story