மண்டபம் கடலோர பகுதிகளில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு ஆய்வு
மண்டபம் கடலோர பகுதிகளில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு ஆய்வு ெசய்தனர். அப்போது கடல்பாசி வளர்ப்பு நிதியுதவியை அதிகரிக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பனைக்குளம்
மண்டபம் கடலோர பகுதிகளில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு ஆய்வு ெசய்தனர். அப்போது கடல்பாசி வளர்ப்பு நிதியுதவியை அதிகரிக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு வருகை தந்தனர். கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் எஸ்.சந்திரன், சிந்தனைச் செல்வன், சிவக்குமார், தளபதி, பிபி நாகை மாலி, இபரந்தாமன், பூமிநாதன், எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர்கள் முன்னிலையில் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் ஆகியோர் மண்டபம் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். முதலில் மண்டபம் மீன் இறங்கும் தளம் பகுதிக்குச் சென்று அங்குள்ள மீனவர்களை சந்தித்து கேட்டறிந்தனர்.
அப்போது மகளிர் குழு கடல்பாசி வளர்ப்புக்கான திட்ட உதவிகளை அதிகப்படுத்த வேண்டும், மீனவர்களுக்கு வழங்கும் மீன்பிடி தடைகால நிவாரணத் தொகை கிடைக்க பெறாதவர்களுக்கு வழங்க வேண்டும், மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் கூடுதலாக மீன்பிடி இறங்கு தளம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மீனவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
விடுதியில் ஆய்வு
இதைதொடர்ந்து மண்டபத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிக்கு சென்று உணவின் தரம் குறித்தும், கட்டமைப்பு வசதிகள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்தனர். மண்டபத்தில் உள்ள கலோனியல் மாளிகைக்கு சென்று ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மாளிகையை பார்வையிட்டு தற்போது கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு வருவதை அதே நிலையில் பணிகளை மேற்கொண்டு கலை சிற்பங்களை பாதுகாக்கப்பட வேண்டும் என சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் அறிவுறுத்தினார். இதுபோல் மண்டபம் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளிலும் இக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
இவர்களுடன் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு அரசு செயலாளர் சீனிவாசன், வருவாய் அலுவலர் கோவிந்தராஜு, சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு செயலாளர் சுப்ரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனீப், மருத்துவம் இணை இயக்குனர் டாக்டர் சகாய ஸ்டீபன் ராஜ், முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து, கோட்டாட்சியர் கோபு, ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் இணை ஆணையாளர் மாரியப்பன், மீன்வளத்துறை இணை இயக்குனர் காத்தவராயன், உதவி இயக்குனர் சிவக்குமார், வட்டாட்சியர் ஜாபர், மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் ஆகியோர் சென்றனர்.