கோவில் சொத்தில் உள்ள ஆக்கிரமிப்பை சட்டப்படி அகற்ற வேண்டும் -ஐகோர்ட்டு உத்தரவு


கோவில் சொத்தில் உள்ள ஆக்கிரமிப்பை சட்டப்படி அகற்ற வேண்டும் -ஐகோர்ட்டு உத்தரவு
x

கோவிலுக்கு சொந்தமாக தண்டையார்பேட்டையில் உள்ள சொத்தை 2 மாதங்களுக்குள் அளவீடு செய்து, அதில் ஆக்கிரமிப்பு இருந்தால் அவற்றை சட்டப்படி அகற்ற வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை மண்ணடியில் உள்ள பவளக்கார தெருவில் வேணுகோபால கிருஷ்ணசாமி என்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கு சொந்தமாக தண்டையார்பேட்டை, வேலாயுதபாண்டி தெருவில் சொத்துகள் உள்ளன. ஆனால், இந்த சொத்தின் மூலம் கோவிலுக்கு எந்த வருமானமும் வரவில்லை. கோவில் நிர்வாகமும் இந்த சொத்தை முறையாக பராமரிக்கவில்லை.

தெளிவான ஆவணம்

இந்த சொத்து கோவிலுக்கு சொந்தமானது என்று தெளிவாக வருவாய் துறையில் ஆவணம் இருந்தாலும், கோவிலில் உள்ள ஆவணத்தில் அந்த விவரம் இல்லை.

எனவே இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட கலெக்டர், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தண்டையார்பேட்டை வேலாயுதபாண்டி தெருவில் உள்ள சொத்தை அடையாளம் கண்டு, அளவு செய்து மீட்க வேண்டும் என்றும், இதற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க போலீஸ் கமிஷனருக்கும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

அகற்ற வேண்டும்

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர், 'தண்டையார்பேட்டையில் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்ய தாசில்தாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால், சட்டப்படி அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் கூறினார்.

எனவே அறநிலையத்துறையின் கோரிக்கையின்படி, தாசில்தார் 2 மாதங்களுக்குள் சொத்தை அளவீடு செய்ய வேண்டும். இதில் ஆக்கிரமிப்பு இருந்தால், அவற்றை சட்டப்படி அறநிலையத்துறை அகற்ற வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளனர்.


Next Story