சட்ட விழிப்புணர்வு முகாம்


சட்ட விழிப்புணர்வு முகாம்
x

சட்ட விழிப்புணர்வு முகாம்

திருப்பூர்

உடுமலை

உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், சட்டப்பணிகள் குழு தலைவரான உடுமலை சப்-கோர்ட்டு நீதிபதி எம்.மணிகண்டன் ஆலோசனைப்படி உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள பகுதிகளில் பல்வேறு சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஆசிட் (திராவகம்) வீசி தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீட்டுத் திட்டத்தின் பயனை பெறுவதற்கு சட்ட உதவி வழங்கப்படும் என்பதை வலியுறுத்தி சட்ட விழிப்புணர்வு முகாம் உடுமலை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.2-ன் வளாகத்தில் நடந்தது. முகாமிற்கு மாஜிஸ்திரேட்டு ஆர்.மீனாட்சி முன்னிலை வகித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் வக்கீல்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story