பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எல்.இ.டி. டிஜிட்டல் திரை


பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எல்.இ.டி. டிஜிட்டல் திரை
x

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எல்.இ.டி. டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டது.

கரூர்

கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் ரவுண்டானா பகுதியில் சாலை பாதுகாப்பு மற்றும் குற்ற சம்பவங்கள் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் எல்.இ.டி. டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் திரையை கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார். இந்த டிஜிட்டல் எல்.இ.டி. திரையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும், மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டாமல் இருப்பது உள்ளிட்டவை குறித்தும், இணையவழி குற்றங்கள், கடன் செயலிகள் போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோக்கள் திரையிடப்படுகின்றன. இந்நிகழ்ச்சியின் போது வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் போலீசார் இனிப்புகள் வழங்கினர்.


Next Story