கோர்ட்டு பணிகளை புறக்கணித்த வக்கீல்கள்


கோர்ட்டு பணிகளை புறக்கணித்த வக்கீல்கள்
x

கோர்ட்டு பணிகளை வக்கீல்கள் புறக்கணித்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட கோர்ட்டுகளில் வக்கீல்கள் சங்கங்களை சேர்ந்த வக்கீல்கள் நேற்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களை பெயர் மாற்றம் செய்து மத்திய அரசு சார்பில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதை திரும்பப்பெற வலியுறுத்தியும், அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டு வரும் மத்திய அரசை கண்டித்தும் பெரம்பலூர் வக்கீல் சங்கத்தை (குற்றவியல்) சேர்ந்த வக்கீல்களும், அட்வகேட் அசோசியேசனை சேர்ந்த வக்கீல்களும் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர். இதனால் கோர்ட்டு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் அவர்கள் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கோர்ட்டு பணிகளை புறக்கணித்து பெரம்பலூர் கோர்ட்டு வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.


Next Story