நாமக்கல், ராசிபுரத்தில்வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
இ-பைலிங் முறையை கண்டித்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் நாமக்கல் வக்கீல்கள் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்க செயலாளர் ராஜவேல் தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியில் பெயர் மாற்றம் செய்து மசோதா தாக்கல் செய்துள்ளதை கண்டித்தும், அதனை திரும்ப பெறவும், இ-பைலிங் முறையை கட்டாயப்படுத்த கூடாது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம், ராசிபுரம் வழக்கறிஞர்கள் சங்கம், ராசிபுரம் சிவில் வழக்கறிஞர்கள் சங்க வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.