போலீஸ் நிலையத்தை வக்கீல்கள் முற்றுகை


போலீஸ் நிலையத்தை வக்கீல்கள் முற்றுகை
x

ராதாபுரம் போலீஸ் நிலையத்தை வக்கீல்கள் முற்றுகையிட்டனர்.

திருநெல்வேலி

ராதாபுரம்:

ராதாபுரம் அருகே உள்ள பாப்பான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன். இவர் ராதாபுரம் மாவட்ட உரிமைகள் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். ராதாபுரம் அருகே உள்ள வடக்கு இளையநயினார்குளத்தை சேர்ந்த மூர்த்தி என்பவரின் சிவில் வழக்கு ஒன்றை நடத்தி வருகிறார். இதில் அவருடைய தம்பி குணசீலன், "எனக்கு எதிராக சிவில் வழக்கில் எப்படி ஆஜராகலாம்? என்று கூறி கடந்த 3-ந் தேதி அரிவாளால் இசக்கியப்பன் காரை தாக்கி, அவரையும் வெட்ட முயன்றுள்ளார்.

இதுகுறித்து இசக்கியப்பன், ராதாபுரம் போலீசில் புகார் செய்தார். ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் என்று கூறி வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ராதாபுரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ பேச்சுவார்த்தை நடத்தினார். உடனடியாக வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்படுவார் என்று கூறியதை தொடர்ந்து வக்கீல்கள் கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து குணசீலன் மீது கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


Next Story