அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு சட்டம் - திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்


அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு சட்டம் - திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் - சென்னை  ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
x

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி அமல்படுத்தும் வகையில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி அமல்படுத்தும் வகையில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

2016ம் ஆண்டு சட்டப் பிரிவின் கீழ் 30% பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் நடைமுறையை எதிர்த்த வழக்கில் அறிவுறுத்தப்பட்டுள்ளது .முதலில் பெண் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கிவிட்டு, பிறகு சமுதாய ரீதியிலான ஒதுக்கீடு என்பது தீர்ப்புக்கு முரணானது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை ரத்து செய்வது முறையாக இருக்காது. அதேவேளையில் தகுதி அடிப்படையில் பணி நியமனம் பெறும் உரிமையையும் மறுக்க முடியாது. என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.


Next Story