திரவுபதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
சிவகிரி திரவுபதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
தென்காசி
சிவகிரி:
சிவகிரி திரவுபதியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும ஒவ்வொரு சமூகத்தினரால் விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. நேற்று மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் உள்ள மூலவர், திரவுபதி அம்மன், கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு திரவுபதி அம்மன், கிருஷ்ணர், அர்ச்சுனன் ஆகியோர் சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா சென்றனர். சப்பரத்திற்கு முன்பாக கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் பூக்குழி இறங்கும் பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என பக்தி கோஷம் எழுப்பிச் சென்றனர்.
Related Tags :
Next Story