சாத்தூரில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக குழி தோண்டும் போது மண் சரிந்து விபத்து - 2 தொழிலாளர்கள் பலி


சாத்தூரில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக குழி தோண்டும் போது மண் சரிந்து விபத்து - 2 தொழிலாளர்கள் பலி
x

சாத்தூரில் பாதாள சாக்கடை திட்ட பணியின் போது மண் சரிந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக குழி தோண்டும் பணியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள குகையூர் கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் ஈடுபட்டனர். குழி தோண்டும் போது தீடீரென்று மண் சரிவு ஏற்பட்டு உள்ளது.

2 மணி நேரம் போராட்டம்

அப்போது பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிக்குள் சக்திவேல் (வயது 40) கிருஷ்ண மூர்த்தி (வயதூ 50) என்ற இருவர்கள் வேலை செய்து கொண்டு இருந்துள்ளனர். மண் சரிந்து விழுந்ததில் இருவரும் சிக்கிக் கொண்டனர்

உடனடியாக அருகிலுருந்தவர்கள் தீயணைப்புத்துறையினர்க்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புதுறை வீரர்கள் ஜேசிபி எந்திர உதவியுடன் சுமார் 2 மணிநேர போராட்டத்திற்குப் பின் மண்ணில் புதைந்த இருவரையும் சடலமாக மீட்டனர்.

போலீசார் விசாரணை

சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் டவுன் போலீசார் மண்ணில் சிக்கி இறந்த சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story