ரூ.18 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.18 கோடி மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.18 கோடி மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
புகார்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ரூ.18 கோடி மதிப்பிலான 2.72 ஏக்கர் நிலம் திருத்துறைப்பூண்டி நாகை சாலையில் உள்ளது.
இந்த நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
ஆக்கிரமிப்பு
இதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை நாகை மண்டல இணை ஆணையர் குமரேசன், திருவாரூர் உதவி ஆணையர் ப.ராணி, மருந்தீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் மு.முருகையன், திருத்துறைப்பூண்டி சரக ஆய்வாளர் சவு.ராஜேந்திர பிரசன்னா மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலம் குறித்து விசாரணை நடத்தினர்.
ரூ.18 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
இந்த விசாரணையில் அந்த நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. பின்னர் ரூ.18 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டனர். இதையடுத்து மீட்கப்பட்ட நிலத்தில் கோவிலுக்கு சொந்தமானது இடம் என்று விளம்பர பேனர் வைத்தனர்.