ரூ.14 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு


ரூ.14 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
x
தினத்தந்தி 12 Sept 2023 12:00 AM IST (Updated: 12 Sept 2023 12:00 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் கொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.14 கோடி மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

திருவாரூர்

கோட்டூர்:

கோட்டூர் கொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.14 கோடி மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

கொழுந்தீஸ்வரர் கோவில்

திருவாரூர் மாவட்டம், கோட்டூரில் கொழுந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ரூ.14 கோடி மதிப்பிலான 6.89 ஏக்கர் நிலம் கோட்டூரில் உள்ளது. இந்த நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது.

இதை தொடர்ந்துஇந்து சமய அறநிலையத்துறை நாகை இணை ஆணையர் குமரேசன் தலைமையில் திருவாருர் உதவி ஆணையர் ராணி திருவாரூர் ஆலய நிலங்கள் தனி தாசில்தார் லெட்சுமி பிரபா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் அந்த நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தெரிய வந்தது.

ரூ.14 கோடி நிலம் மீட்பு

இதை தொடர்ந்து ரூ.14 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். இதையடுத்து அங்கு எல்லை கற்கள் நடப்பட்டு தகவல் பதாகை வைக்கப்பட்டது.

இந்த பணியில் கோவில் செயல் அலுவலர். சிவகுமார், கோட்டூர் சரக ஆய்வாளர் புவனேஸ்வரன், நில அளவையர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.


Next Story