லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் லட்சார்ச்சனை
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம்புதூரில்,லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் லட்சார்ச்சனை தொடங்கியது.
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம்புதூரில், லட்சுமி ஹயக்ரீவர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும், பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி அபிவிருத்திக்காகவும், செய்யும் தொழிலில் ஏற்படும் சங்கடங்கள் நீங்கி, தொழில் அபிவிருத்தி அடையவும், ஹயக்ரீவர் சாமிக்கு, லட்சார்ச்சனை மற்றும் மகா யாகம் செய்வது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. காலை 8 மணிக்கு ஹயக்ரீவர் சாமிக்கு லட்சார்ச்சனை தொடங்கியது. பின்னர் சாமி தங்க கவசத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தலா 408 பேனா மற்றும் பென்சில்களால் மாலை தயார் செய்யப்பட்டு, சாமிக்கு சாத்தப்பட்டது. தொடர்ந்து இரவு 8 மணி வரை லட்சார்ச்சனை நடந்தது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு ஹயக்ரீவர் மகா யாகம், 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சாமிக்கு சாத்தப்பட்ட பேனா வழங்கப்படும்.