ஏரி, குளங்கள் நிரம்பின: பெரம்பலூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது


ஏரி, குளங்கள் நிரம்பின: பெரம்பலூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது
x

ஏரி, குளங்கள் நிரம்பியதால் பெரம்பலூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக காலையில் வெயிலும், மதியத்திற்கு பிறகு இதமான தட்ப வெப்பநிலையும் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ததால், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்தன. இதனால் பெரம்பலூர் நகரில் அடுத்த ஓர் ஆண்டுக்கு தண்ணீர் தட்டுப்பாட்டு நீங்கியது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம் அருகே பச்சைமலை-செம்மலை இடையே அமைந்துள்ள விசுவக்குடி அணையின் மொத்த உயரம் 34 அடி ஆகும். இதில் 25.9 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 43.42 மில்லியன் கனஅடியில் 24.59 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. இதேபோல் ஆலத்தூர் தாலுகா கொட்டரை மருதையாற்று நீர்த்தேக்கத்தின் உயரம் 33 அடியாகும். இதன் கொள்ளளவு 212.47 மில்லியன் கனஅடி ஆகும். இதில் முழுமையாக தண்ணீர் நிரம்பி உள்ளது.


Next Story