மேய்ச்சல் நிலமாக மாறி வரும் ஏரி, குளங்கள்


மேய்ச்சல் நிலமாக மாறி வரும் ஏரி, குளங்கள்
x

சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் ஏரி, குளங்கள் மேய்ச்சல் நிலமாக மாறி வருகின்றன. நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் உள்ளது.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் ஏரி, குளங்கள் மேய்ச்சல் நிலமாக மாறி வருகின்றன. நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் உள்ளது.

நெற்களஞ்சியம்

தஞ்சை, திருவாரூர், நாகை, மயலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்கின்றன. இங்கு உள்ள விளை நிலங்களுக்கு தண்ணீர் ஆதாரமாக மேட்டூர் அணை திகழ்கிறது.

இந்த ஆண்டு குறித்த நேரத்தில் (ஜூன் மாதம் 12-ந் ேததி) தண்ணீர் திறக்கப்பட்டாலும், போதிய தண்ணீர் கிடைக்காமல் குறுவை சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்ட கடைமடை பகுதியான சேதுபாவாசத்திரம் பகுதியில் போதுமான மழை இல்லாமலும், போதுமான ஆற்று தண்ணீர் கிடைக்காமலும் தொடர்ந்து நெல் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

பெயரளவில்...

இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும் காவிரி நீர் கடைமடையை முழுமையாக வந்தடையவில்லை. 5 நாட்கள் வீதம் முறைவைத்து வழங்கப்படும் தண்ணீரும் முறையாக வழங்கப்படாமல் பெயரளவில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கடைமடை பகுதி வஞ்சிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள். தற்போது ேசதுபாவாசத்திரம் கடைமடையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பெரிய ஏரிகளும், 300-க்கும் மேற்பட்ட சிறிய குளங்களும் தண்ணீரின்றி வறண்டு ஆடு, மாடுகள் மேயும் மேய்ச்சல் நிலமாக மாறி உள்ளன.

தண்ணீர் கிடைக்கவில்லை

சேதுபாவாசத்திரம் பகுதியில் நெல் சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காத நிலையில், ஏரி, குளங்களை நிரப்புவதற்கும் தண்ணீர் வழங்கப்படவில்லை. மேட்டூர் அணை திறந்து 2 மாதங்களுக்கு மேலாகியும் இங்கு சாகுபடி தொடங்கவில்லை. ஏரி, குளங்களும் நிரம்பவில்லை.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'கடைமடை பகுதியான சேதுபாவாசத்திரம் பகுதிக்கு தேவையான ஆற்றுப்பாசன தண்ணீரை வழங்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது' என்றனர்.


Next Story