பெண் தீக்குளிக்க முயற்சி


பெண் தீக்குளிக்க முயற்சி
x

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீக்குளிக்க முயன்ற பெண்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மனு அளிக்க வந்த பெண் ஒருவர் திடீரென மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் பாட்டிலை கைப்பற்றி, அவரை சமாதானம் செய்தனர். மேலும் அவர் மீது தண்ணீரை ஊற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள மேலகளத்தூர் பகுதியை சேர்ந்த மலர் (வயது50) என்பது தெரியவந்தது. இவருடைய கணவர் செல்வம் இறந்து விட்டார். தற்போது மகள், மகனுடன் வசித்து வருகிறார். இவர் தனது தாய் நாகம்மாளிடம் இருந்து விலை கொடுத்து நிலத்தை வாங்கி உள்ளார்.

புகார் மீது நடவடிக்கை இல்லை

அந்த நிலத்தில் விவசாயம் செய்து அறுவடை செய்ய இருந்த நேரத்தில் திடீரென மலரின் அண்ணன் நெல்லை அறுவடை செய்து விட்டார். இதுகுறித்து மலர் கொரடாச்சேரி போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story