பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறைவிழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு


பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறைவிழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம்

பள்ளி மாணவி பலாத்காரம்

விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 11 வயதுடைய மாணவி கடந்த 2020-ம் ஆண்டில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இவரிடம் 27.5.2020 அன்று அவரது பாட்டி பணம் கொடுத்து அருகில் உள்ள கொய்யாத்தோப்புக்கு சென்று கொய்யாப்பழம் வாங்கி வரும்படி கூறினார். அதன்படி அந்த மாணவி, அதே பகுதியில் உள்ள கொய்யாத்தோப்புக்கு சென்று அங்கு கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த சின்னகுச்சிப்பாளையத்தை சேர்ந்த பாவாடை மகன் ராவுகாலம் என்கிற செந்திலிடம் (35) கொய்யாப்பழம் தரும்படி கேட்டுள்ளார். மாணவி மட்டும் தனியாக வந்ததை அறிந்த செந்தில், அந்த மாணவியின் வாயை துணியால் பொத்தி தோப்புக்குள் வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.இதை செந்திலின் மகள் பார்த்து கூச்சல் போடவே செந்தில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

20 ஆண்டு சிறை

பின்னர் இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் செந்தில் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட செந்திலுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு சார்பில் இழப்பீடாக ரூ.7 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட செந்தில், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலா ஆஜரானார்.


Next Story