ராணிப்பேட்டை அருகே லாரி மோதி தொழிலாளி சாவு


ராணிப்பேட்டை அருகே லாரி மோதி தொழிலாளி சாவு
x

ராணிப்பேட்டை அருகே லாரி மோதி தொழிலாளி பலியானார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை அருகே லாரி மோதி தொழிலாளி பலியானார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜாராம் தாஸ் (வயது 21). இவர் ராணிப்பேட்டை அருகே மாந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா்.

இந்த நிைலயில் பணி முடிந்து நேற்று காலை தொழிற்சாலை மெயின் கேட் வழியாக வந்தபோது தோல் ஏற்றி வந்த மினிலாரி ராஜாராம்தாஸ் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்க அவரை பரிசோதத்த டாக்டர்கள் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story