தொழிலாளர் நல வாரிய இணையதளம் 20 நாட்களாக முடக்கம் - சென்னையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நல வாரிய பயன்களை நேரடியாக பெறும் முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.
சென்னை,
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் சுமார் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். தொழிலாளர் வைப்பு நிதியில் பணம் எடுத்தல், புதிய உறுப்பினர்கள் பதிவு, உதவி திட்டங்களைப் பெறுதல் உள்ளிட்ட பயன்களுக்காக தொழிலாளர் நல வாரிய இணையதளம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 20 நாட்களாக தொழிலாளர் நல வாரிய இணையதளத்தின் சர்வர் முடக்கப்பட்டுள்ளது. இதனால் இணையதளம் மூலம் பெறக்கூடிய சேவைகளை பெறமுடியாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சென்னை தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நல வாரிய பயன்களை ஆன்லைன் மட்டுமின்றி, நேரடியாகவும் பெறும் முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story