ரூ.1 கோடியே 35 லட்சம் செலவில் ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வகம்

ரூ.1 கோடியே 35 லட்சம் செலவில் ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வகம்
x

உடுமலை அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடியே 35 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திருப்பூர்

உடுமலை அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடியே 35 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வகம்

உடுமலை அரசு மருத்துவமனைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். சிலர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.1 கோடியே 35 லட்சம் செலவில் ஆர்.டி.பி.சி.ஆர்.ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வகம் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த ஆய்வகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதையொட்டி உடுமலை அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குனர் டாக்டர் பி.பிரேமலதா, அரசு மருத்துவமனை முதன்மை டாக்டர் உமாமகேஸ்வரி, ஆய்வக டாக்டர் உமர்செரீப், தேசிய நல்வாழ்வு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அருண்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story