ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி
புதுச்சத்திரத்தில் ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி நடைபெற்றது.
புதுச்சத்திரம் வட்டாரத்திற்கு உட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சி நடந்தது. புதுச்சத்திரம், செல்லப்பம்பட்டி, பாச்சல், ஏளூர், திருமலைப்பட்டி மற்றும் காரைக்குறிச்சிப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் குறு வள மைய பயிற்சிகள் நடத்தப்பட்டன. அதில் 76 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இதில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித ஆசிரியர் கையேடு மூலம் மாணவர்களுக்கு புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பாடப்பொருளுக்கான கற்றல் விளைவை செயல்பாடுகள் மூலம் வடிவமைப்பது குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. 12 இடைநிலை ஆசிரியர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டனர். ஆர்வமூட்டும் செயல்பாடுகள் மற்றும் குழு செயல்பாடுகள் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது.
புதுச்சத்திரம் வட்டாரக் கல்வி அலுவலர் சுப்பிரமணியம் பயிற்சியை பார்வையிட்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகேஸ்வரி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.