குண்டர் சட்டத்தில் 3 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.


மூதாட்டியை ெகான்று நகை பணம் கொள்ளையடித்த வழக்கில் குண்டர் சட்டத்தில் 3 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருப்பூர்

மூதாட்டியை ெகான்று நகை பணம் கொள்ளையடித்த வழக்கில் குண்டர் சட்டத்தில் 3 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருப்பூர் சோளிபாளையம் கிராமத்தில் சீனிவாசா நகர் முதல் வீதியை சேர்ந்தவர் கோபாலன் (வயது 68). இவருடைய வீட்டில் கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி, அவர் மனைவி முத்துலட்சுமி (62) தனியாக இருந்தார். அவரை கொலை செய்து, தூக்குப்போட்டது போல் உடலை தொங்க விட்டு வீட்டு பீரோவில் இருந்த 40 பவுன் நகை, ரூ.9 லட்சத்து 82 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கில் தொடர்புடைய, திருப்பூர் நல்லூரை சேர்ந்த அருண்குமார் (24), ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் முத்தரசன்பாளையத்தை சேர்ந்த தினேஷ்குமார் (27), திருப்பூர் நல்லூரை சேர்ந்த அமரன் (21) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டார். அதன்படி கோவை மத்திய சிறையில் உள்ள அருண்குமார், தினேஷ்குமார், அமரன் ஆகிய 3 பேரிடம் ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 74 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.


Related Tags :
Next Story