காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; நாளை நடக்கிறது


காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; நாளை நடக்கிறது
x

காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.

திருச்சி

கல்லக்குடி:

புள்ளம்பாடி ஒன்றியம் கீழரசூர் கிராமத்தில் மகாகணபதி, பாலமுருகன், காளியம்மன், மூப்பனார், ஆகாசகருப்பு, மதுரைவீரன் மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில்கள் புனரமைக்கப்பட்டு, புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று விக்னேஸ்வரபூஜை, நவக்கிரக ஹோமம் உள்ளிட்டவற்றுடன் முதல் கால யாகபூஜை தொடங்கியது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை இரண்டாம் கால யாக பூஜைகள் தொடங்கப்பட்டு, ஹோமங்கள் நடைபெறுகிறது. இரவில் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து நாளை காலை 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் அனைத்து விமான கலசத்திற்கும், மூலவருக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், நாட்டாமை மற்றும் கோவில் பூசாரிகள், இளைஞர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


Next Story