கோவில் கும்பாபிஷேகம்
சாயல்குடி அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
ராமநாதபுரம்
சாயல்குடி,
சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் பத்திரகாளியம்மன், மதுரைவீரன் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. சத்திரிய இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள் தலைமை தாங்கினர். பத்திர காளியம்மன், மதுரை வீரன் சாமி மற்றும் சித்தி விநாயகர், கன்னி விநாயகர், ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் உஜ்ஜயினி காளியம்மன் சாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை, யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் கடம் புறப்பாடாகி கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பொது அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை சத்திரியஇந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story