முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
வத்தலக்குண்டுவில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
வத்தலக்குண்டுவில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்தநிலையில் நேற்று பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை கொண்டு சிவாச்சாரியார் சிவசுப்பிரமணியம் கலச பூஜை நடத்தினார். பின்னர் கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது வானில் கருடன் வட்டமிட்டது. இதில் வத்தலக்குண்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாலையில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகத்தில் இ.பெ.செந்தில்குமார் எம்.எல். ஏ., வத்தலக்குண்டு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.பி.முருகன், கோவில் திருப்பணி குழு தலைவர் மருதை என்ற அன்பு, மாவட்ட கவுன்சிலர் கனிக்குமார், நகர செயலாளர் சின்னத்துரை, பேரூராட்சி தலைவர் சிதம்பரம், ஒன்றிய கவுன்சிலர் விஜயகர், ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் ரமேஷ், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணி, கோவில் செயல் அலுவலர் கனகலட்சுமி, விராலிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், ஒன்றிய துணைச்செயலாளர் வனிதா மாணிக்கம், அ.ம.மு.க. நிர்வாகி தங்கப்பாண்டி, மக்கள் நீதி மய்யம் ஒன்றிய செயலாளர் லட்சுமி நாராயணன், திருப்பணிக்குழு ஜெகதீஸ்வரன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.