முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

வெள்ளனூர் அருகே உள்ள காவேரி நகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 3 நாட்களாக கோவில் முன்பு யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து யாகசாலையில் கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் அம்மன் விமானம் மற்றும் கோபுரத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story