குலசேகரநாதர் கோவில் தைப்பூசத் திருவிழா தேரோட்டம்


குலசேகரநாதர் கோவில் தைப்பூசத் திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை குலசேகரநாதர் கோவில் தைப்பூசத் திருவிழா தேரோட்டம் நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாதர் கோவிலில் தைப்பூச திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவில் சுவாமி, அம்பாள் வாகனத்தில் எழுந்தருளி வாணவேடிக்கையுடன் வீதி உலாவும் நடந்து வருகிறது.

7-ம் திருநாளான நேற்று முன்தினம் காலை சிறப்பு அபிஷேகம், மாலையில் பல்லக்கில் சுவாமி- அம்பாள் வீதி உலாவும், அதனை தொடர்ந்து கோ ரதத்தில் முக்கிய ரதவீதிகளில் சுவாமி- அம்பாளும் பவனி வந்தனர்.

முக்கிய நிகழ்ச்சியான நேற்று செங்கோட்டையில் விநாயகர், முருகன் கோ ரதத்திலும், சுவாமி- அம்பாள் தனித்தனி தேர்களிலும் எழுந்தருளி பவனி வந்தனர். விழாவில் செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சியில் நகரசபை தலைவர் ராமலட்சுமி, தி.மு.க. நகர செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இந்து முன்னணி மற்றும் விஷ்வ இந்து பரிசத் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story