கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கரூர் கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2022-23-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் நல்ல மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் வி.நந்தினி 500-க்கு 477 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், எஸ்.ராகுல் 470 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், சி.ரோகிதா 469 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடமும் பிடித்தனர். மேலும் 450 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 17 பேரும், 350 மதிப்பெண்களுக்கு மேல் 11 பேரும் பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளியில் பொன்னாடை அணிவித்து பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவிற்கு கொங்குகல்வி அறக்கட்டளையின் தலைவர் கொங்குமாமணி அட்லஸ்.எம்.நாச்சிமுத்து தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் பி.வாசுதேவன் முன்னிலை வகித்தார். மேலும் அறக்கட்டளையின் செயலாளர் விசா.எம்ஏ.சண்முகம், பொருளாளர் வி.வீரப்பன், துணைத்தலைவர் கே.அம்மையப்பன், இணைச்செயலாளர் கே.ரமேஷ், நிர்வாக சபை அங்கத்தினர் மற்றும் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களையும், சாதனைக்கு உறுதுணையாக இருந்த முதல்வர் எஸ்.வி.கே.கற்பகம், துணைமுதல்வர் கே.பி.மகேஸ்வரி மற்றும் ஆசிரியர்களையும் கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவர் கொங்குமாமணி அட்லஸ்.எம்.நாச்சிமுத்து பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.