சின்னாளப்பட்டி சேரன் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு


சின்னாளப்பட்டி சேரன் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டுமொத்த சாம்பியன் பெற்ற சின்னாளப்பட்டி சேரன் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

திண்டுக்கல்

நத்தம் என்.பி.ஆர். கல்லூரியில் தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இடையேயான கலை போட்டிகள் நடைபெற்றது. இதில் சின்னாளப்பட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 11 மற்றும் 12-ம் வகுப்பு பிரிவில் அறிவியல் கண்காட்சி, நடனம், ஓவியம் உள்பட 6 போட்டிகளில் முதல் பரிசையும், அதே பிரிவில் 2 போட்டிகளில் 3-ம் பரிசையும் பெற்றனர். இதேபோல் 9 மற்றும் 10-ம் வகுப்பு பிரிவில் 5 போட்டிகளில் 2-ம் பரிசையும், 2 போட்டிகளில் 3-ம் பரிசையும் பெற்றனர். இதையடுத்து சின்னாளப்பட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் பள்ளி அதிக புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு பள்ளி முதல்வர் திலகம் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை வெண்ணிலா முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் எம்.சிவக்குமார் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பாராட்டினார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் பேசுகையில், நமது பள்ளி கல்வியில் மட்டுமல்லாது, கலைத்துறையிலும், விளையாட்டு துறையிலும் தனி முத்திரை பதித்து வருகிறது. மாணவர்களின் திறன்களையும், ஊக்குவிக்கும் பெற்றோர்களையும் பாராட்ட வேண்டும் என்றார்.


Next Story