அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும், முன்னாள் மாணவர்கள் சார்பில் விருது வழங்கி பாராட்டும் விழா நடந்தது. உதவி தலைமையாசிரியர் அஜிதா தலைமை தாங்கினார். ஆசிரியர் செல்வி வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோலப்பன், வள்ளியூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ், வக்கீல் ஆரிப், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட அமைப்பாளர் கனி, ஆனைகுளம் பஞ்சாயத்து தலைவர் அசன் மைதீன், ஒன்றிய கவுன்சிலர் ரைகானா ஜாவித், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முகம்மது ஹக், ஜமாத் செயலாளர் சாதிக் அலி, முன்னாள் மாணவர் முகம்மது ஒய்ஸ் ஆகியோர் மாணவர்கள், ஆசிரியர்களை பாராட்டி விருது வழங்கினர். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. நல்லாசிரியர் மகேஷ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.