கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க நடவடிக்கை புதிதாக பொறுப்பேற்ற முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா பேட்டி


கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க நடவடிக்கை புதிதாக பொறுப்பேற்ற முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா பேட்டி
x
தினத்தந்தி 4 May 2023 12:15 AM IST (Updated: 4 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா கூறினார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிாயற்றி வந்த சரஸ்வதி திருவள்ளுவர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக விழுப்புரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த கிருஷ்ணபிரியா நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் இடைநிற்றலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை திருமணம் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கல்வராயன்மலைவாழ் மாணவர்கள் கல்வி கற்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார். புதிதாக பொறுப்பேற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாவுக்கு, மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கப்பள்ளி) ராஜி, தனியார் பள்ளி (துரைராஜ்), இடைநிலை பள்ளி (பொறுப்பு) ராமச்சந்திரன், நேர்முக உதவியாளர்கள் கோபி, ஆனந்தன் கண்காணிப்பாளர் முருகானந்தம் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக அவர் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


Next Story