தஞ்சையில் கிருஷ்ண ஜெயந்தியை யொட்டிஉறியடி திருவிழா


தஞ்சையில் கிருஷ்ண ஜெயந்தியை யொட்டிஉறியடி திருவிழா
x

தஞ்சையில் கிருஷ்ண ஜெயந்தியை யொட்டிஉறியடி திருவிழா

தஞ்சாவூர்

தஞ்சை மேலவீதியில் புகழ்பெற்ற நவநீதகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கிருஷ்ணன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று நவநீதகிருஷ்ணனுக்கு காலை 7 மணிக்கு குபேர சம்பத்துகள வேண்டி பல்வேறு திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனமும் அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணனை தரிசனம் செய்தார்கள். இக்கோவிலில் கிருஷ்ணன் ஜெயந்தி உற்சவம் நேற்று தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இன்று (வியாழக்கிழமை) 2-ம் நாள்காலை 8 மணிக்கு புகழ்பெற்ற தொட்டில் உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா மற்றும் கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் ஆஸ்திக மகா சபை கைங்கர்ய குழுவினர் செய்து வருகிறார்கள். கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தஞ்சை மேலவீதியில் உறியடி திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 23-ம் ஆண்டுஉறியடி திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால் பக்தி இசை பாடினார். அதைத்தொடர்ந்து வழுக்கு மரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டதையடுத்து உறியடி திருவிழா தொடங்கியது.

இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு வழுக்குமரம் ஏறினர். இறுதியில் ஒரு வாலிபர் வழுக்குமரம் ஏறினார். இதனை திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.


Related Tags :
Next Story