கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா


கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா
x
தினத்தந்தி 6 Sept 2023 12:30 AM IST (Updated: 6 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் இன்று கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

திருநெல்வேலி

நெல்லையில் இன்று கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி விழா

கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று (புதன்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் கோவிலில் இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், மாலையில் மகா சிறப்பு ஆரத்தியும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது.

நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலையில் பெருமாள், கிருஷ்ணர் அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். மாலை 5 மணிக்கு எட்டெழுத்து பெருமாள் கோவில் அருகே உள்ள கோசாலையில் கோபால கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

பானையில் பலகாரங்கள்

இதைத்தொடர்ந்து கிருஷ்ணருக்கு மண்பானையில் வெண்ணெய், நெய், முறுக்கு, அதிரசம், லட்டு, அல்வா, சீடை உள்ளிட்ட அனைத்து வகையான திண்பண்டங்களும் படைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான பானைகளில் கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டு பிரசாதம் படைக்கப்பட்ட பானைகள், கலயங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இதற்காக கலயங்கள், பானைகள் விதவிதமாக வர்ணம் பூசப்பட்டு சுவாமி படங்கள் வரையப்பட்டு தயார் நிலையில் உள்ளன. கிருஷ்ணருக்கு படைக்கப்படுகின்ற பலகாரங்கள் செய்யும் பணி மும்மரமாக நடந்து வருகிறது.

நெல்லை டவுன் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் உள்ள சந்தான கிருஷ்ணர் சன்னதியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சந்தான கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.


Next Story