கண்ணபிரான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி


கண்ணபிரான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி
x

கடலூர் கண்ணபிரான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

கடலூர்

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத கண்ணபிரான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதற்காக காலை 9 மணியளவில் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்ததும், திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சாமி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு விசேஷ யாகவேள்வி திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு உறியடி மற்றும் சாமி வீதிஉலாவும் நடக்கிறது. தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலையில் திருமஞ்சனமும், மாலையில் கருட சேவையில் வீதிஉலாவும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு 7 மணியளவில் திருக்கல்யாணம் மற்றும் சாமி வீதிஉலாவும், 10-ந் தேதி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.


Next Story