கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் கூட்டம்
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் கூட்ட அரங்கில் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்பராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர் ராஜேஷ் குமார் முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில் 34 தீர்மானங்கள் பரிசீலனைக்கு வைக்கப்பட்டு அனைத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் கடலையூர், ஈராச்சி, கீழ ஈரால் மற்றும் வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகளில் தினக் கூலியாக பணியாற்றும் ஊழியர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாத ஊதியம் ரூ 6 லட்சத்து 75 ஆயிரத்து 600 வழங்கியதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story