கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா


கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா
x
தினத்தந்தி 26 Oct 2023 12:15 AM IST (Updated: 26 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு பெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி (மேற்கு):

கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோடு முத்து மாரியம்மன் கோவிலில் கடந்த 15-ந்தேதி முதல் 23-ந் தேதி வரை நவராத்திரி விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு தினமும் காலையில் வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கொலு மண்டபத்தில் முதல் 3 நாட்கள் துர்கா பூஜை, அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமி பூஜை, கடைசி 3 நாட்கள் சரஸ்வதிபூஜை நடைபெற்றது. சரஸ்வதி பூஜையில் முத்துமாரியம்மன் சரஸ்வதி கோலத்தில் கையில் வீணையுடன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை நடைப்பெற்றது. விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story