கோவில்பட்டி காளியம்மன் கோவில் விழாவில் முளைப்பாரி ஊர்வலம்
கோவில்பட்டி காளியம்மன் கோவில் விழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி காளியம்மன் கோவிலில் ஆடி பொங்கல் விழா நடந்து வருகிறது. 4-ம் நாள் நிகழ்ச்சியாக மாலையில் கோவில் முன்பு மஞ்சள் நீராட்டு விழாவும், அதனை தொடர்ந்து ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்ட முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. இரவு அடைக்கலம் காத்தான் மண்டபம் முன்பு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம், துணைத்தலைவர் எம்.செல்வராஜ், செயலாளர் எஸ்.ஆர்.ஜெயபாலன், பொருளாளர் டி.ஆர்.சுரேஷ் குமார், கோவில் தர்மகர்த்தா எஸ்.எம்.மாரியப்பன், செயலாளர் செ.மாணிக்கம் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story